மயான பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
மதுரை அவனியாபுரம் அடுத்து வெள்ளக்கல் மயான பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ளது. இக்கோயில் கிழக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது. நேற்றிரவு (ஆக.22) இக்கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் இங்கு வரும் பக்தர்களுக்கு தொழில் நஷ்டம். திருமண தடை. குழந்தை இல்லாமல். இருப்பது தீராத நோய் போன்ற எதிரிகள் தொல்லை மேலும் எதிரிகளின் எதிர்மறை ஆற்றல் தடுக்கும் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பூசாரி கண்ணையாவிடம் அருள் வாக்கு கேட்டு சென்றனர். கேட்ட அருள் வாக்கு பலித்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை யாக சாலையிலும் நெய். போன்ற பொருட்களையும் அம்பாளுக்கு பட்டு ,எலுமிச்சம்பழம் மாலை, பூ ,போன்றவைகளை பூசாரி உத்தரவுபடி செலுத்தினார்கள். இரவு பூஜைக்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story





