கல்லூரி பேருந்து மோதியதில் மாணவன் பலி.

X
மதுரை மேலுார் அட்டப்பட்டியை சேர்ந்த பாண்டியின் மகன் காவியன் (13) என்பவர் தும்பைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவர் நேற்று (ஆக.22) மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் விநாயகர் சிலை செய்வதற்காக கண்மாயில் மண் எடுக்க சென்றார். அப்போது பூவந்தியில் உள்ள தனியார் கல்லுாரி பேருந்து மோதியதில் காவியன் உயிரிழந்தார் . இது தொடர்பாக கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

