மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியில் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், பரதராமி போலீசார் ராமாலை பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர் . அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

