நாற்காலியுடன் வந்து மனு அளித்த மாற்றுத்திறனாளி சகோதரி மாணவிகள்

X
வாணியம்பாடியில் நடைப்பெற்ற நலம்காக்கும் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த ஆட்சியர், மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம், தங்கள் பகுதியிற்கு சாலை வசதி செய்துதரக்கோரி, சக்கர நாற்காலியுடன் வந்து மனு அளித்த மாற்றுத்திறனாளி சகோதரி மாணவிகள்*. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட லாலாஏரி, கொல்லகொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. மேலும் ஏரி வரத்து கால்வாயை சாலையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு விளைவிக்கக் கூடிய காய்கறி வகைகள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும் மேலும் அடிப்படைத் தேவைகளுக்காக செல்வதற்கும் முறையான சாலை வசதிகள் இல்லை என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான முருகன் இவரது மனைவி ரூபாவதி இவர்களுக்கு இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளன இவர்கள் மூன்று பேருமே மாற்றுத்திறனாளியாக உள்ளனர். இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு அவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பேட்டரியில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர் இதில் அக்கா மற்றும் அவரது தங்கை இருவரும் முறையான சாலை வசதி இல்லாத மண் சாலையை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அதிக அளவில் சேரும் சகதியாக உள்ள நிலையில் பேட்டரி வண்டியை அந்த சாலையில் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் இன்று வாணியம்பாடியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நடைபெற்றது அப்போது அங்கு முகாமினை பார்வையிட வந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி, மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோரை மாற்றுத்திறனாளியான சஞ்சனா என்ற பெண் குழந்தை தனது தந்தையுடன் வந்து, கொல்லகொட்டாய் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள மண் சாலையானது, சேறும், சகதியுமாக மாறியுள்ளதாகவும், இதனால் தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச்செல்வதில், கடும் சிரமம் ஏற்படுவதாகவும், இந்நிலையில் அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திதரக்கோரி ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும், சட்டமன்ற உறுப்பினர் தேவராஜிடம் மனு அளித்தார், அதனை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்ககோரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டார்..
Next Story

