பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் நினைவேந்தல் கூட்டம்

பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் நினைவேந்தல் கூட்டம்
X
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் தெய்வத்திரு இளங்கோவின் மறைவிற்கு நினைவேந்தல் கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் தெய்வத்திரு இளங்கோ மறைந்ததையொட்டி, அவரது வாழ்க்கை நினைவுகளை போற்றும் விதமாக கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க கலையரங்கத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இளங்கோவின் திருவுருவப்படத்தினை ஆட்சி மன்ற குழு இயக்குனர் நிர்மலா இளங்கோ திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் துவக்க உரையாற்றினார். 1985ல் கல்லூரி படிப்பினை நிறைவு செய்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நினைவு பரிசாக முப்பரிமாண இளங்கோ திருவுருவப்படத்தினை வழங்கினார்கள். முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் செந்தில்குமார், தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் பல முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் நிகழ்வுகளையும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். கல்லூரி துணைத் தலைவர் ஈஸ்வர் மற்றும் தாளாளர் புருஷோத்தமன் தலைமை வகித்து, தங்களது வாழ்வில் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொடுத்து, செயலாக உருவாக்கிய தலைவர் பற்றிய நினைவுகளை ஏற்புறையாக வழங்கினர். முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துணைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story