நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்கம் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்கம் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் தலைமையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஒன்றிய பகுதிகளில் இருந்தும் நகரப்பகுதியில் இருந்தும் அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். வருகை தந்த நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உயரம், எடை, ஆகியவற்றை அளந்து தேவைப்படும் மருத்துவ உதவிக்கு அந்தந்த சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டனர். காது,மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், அன்னப் பிளவு சிகிச்சை மருத்துவம், இசிஜி, ஸ்கேன் , உள்ளிட்ட கருவிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்டு பயனாளிகளுக்குஎன்ன மாதிரியான நோய் உள்ளது, அதற்கு எந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாம் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் சாலையில் தேவனாங்குறிச்சி பகுதி பிரதான சாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில்முகாம் நடைபெறும் இடம் இருந்ததால் பயனாளிகள் இருசக்கர வாகனங்களிலோ அல்லது நடந்தோ வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. காலையில் நேரமாக வந்த நோயாளிகள் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து திரும்பி செல்லும் போது நடந்தும், மற்றவர்களிடம் லிப்ட் கேட்டும் சென்றனர், கர்ப்பிணிகள் வயது முதிர்ந்தோர் சாலையின் ஓரங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. குமாரபாளையத்தில் இருந்து காது கேட்காத ஒரு பாட்டியை அழைத்து வந்த திலகவதி என்ற பெண் பிரதான சாலையில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு ஆட்டோவில் செல்வதற்கு ரூபாய் 200 கொடுத்து வந்ததாகவும், அங்கு சென்ற பிறகு காதொலியை பரிசோதிக்க தேவைப்படும் கருவி கொண்டுவர முடியவில்லை என்றும் இந்த பரிசோதனையை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக திலகவதி தெரிவித்தார். வருகை தந்த பயனாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை சோதனைக் கருவிகள் ஒரே இடத்தில் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் பயனடைந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பொது மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசைபொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த முகாமில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொழு நோய்க்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி,நாமக்கல் மாவட்ட நல அலுவலர் பூங்கொடி தாசில்தார் கிருஷ்ணவேணி,நாமக்கல் மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி,மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கே எஸ் மூர்த்தி,திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய திமுகசெயலாளர் வட்டூர் தங்கவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன்,தேவனாங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருண்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்,இணைச்செயலாளர் மயிலீஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றி செந்தில், திருச்செங்கோடு கிழக்கு நகர செயலாளர் குமார்,மேற்கு நகர செயலாளர் அசோக்குமார்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தெய்வம் சக்தி,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த முகாம் குறித்துமுகாமை பார்வையிட வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் கேட்டபோது. இது ஒரு சிறப்பான திட்டம். அனைவரும் பயன் பெற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் உருவாக்கியுள்ள திட்டம். மூன்றாம் இங்கு செய்யப்படும் பரிசோதனைகளை வெளியில் செய்வதாக இருந்தால் 5,000 ரூபாய் வரை செலவாகும் என்கிற நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவ முகாம் மூன்றாம் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு தேவைப்படும் பரிசோதனைகள் எல்லாம் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்கிறோம். இந்த அறிக்கை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வகையில் கணினியில் தரவுகள் பாதுகாக்கப்பட உள்ளன என தெரிவித்தார். போக்குவரத்து குறைபாடு குறித்து கேட்டபோது இது குறித்து தற்போது தான் தெரிய வருகிறது இனிவரும் காலங்களில் இதனையும் கருத்தில் கொண்டு தக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார் திருநங்கைகளுக்கு திருச்செங்கோடு கூட்டப்பள்ளி அருகே வீட்டு மனை வழங்கியதில் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேட்டபோது திருநங்கைகள் அரசு கொடுத்த இடத்தில் அமர்த்த அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்யும் என தெரிவித்தார். இந்த முகாமில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர்
Next Story