சங்கரன்கோவிலில் மன நலன் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் மன நலன் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
X
மன நலன் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கோவை மாவட்டம் பாப்பா நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் - கோமதி தம்பதியனரின் மகன் கருப்பசாமி (33). கருப்பசாமி மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆதி சங்கர விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் கருப்பசாமியின் பாட்டி பெத்தநாயகியம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானர். பாட்டி பெத்தநாயகியம்மாளின் துக்க நிகழ்விற்கு கோயமுத்தூரிலிருந்து வாலிபர் கருப்பசாமி குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சங்கரன்கோவில் பெட்டக்குளம் அருகே உள்ள பாலத்தில் உள்ள கம்பியில் துண்டால் வாலிபர் கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சின்னக்கோவிலான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வாலிபர் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று மதியம் பிரேத பரிசோதனைக்கு பின்பு வாலிபர் கருப்பசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாட்டியின் விசேஷம் ஞாயிற்றுக்கிழமை நாளை (24-8-2025) நடைபெற உள்ள நிலையில் வாலிபர் கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story