தக்கலை : ஐஎன்டியுசியின்  வாகன பிரச்சார பயணம்

தக்கலை : ஐஎன்டியுசியின்  வாகன பிரச்சார பயணம்
X
எம்பி துவக்கினார்
குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி  சார்பில்  தக்கலை தாலுகா அலுவலகம் அருகே இருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரை வாகன பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது.  கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவர் பேசுகையில்:-. மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கொண்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது அவர்களின் கடமை ஆகும்.  உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களுக்கு துணையாக இருப்பேன். பாராளுமன்றத்தில் பேசியும் நிறைவேற்றி தர முயற்சி எடுக்கப்படும் என பேசினார்.          நிகழ்ச்சியில்   பத்மநாபபுரம் தொகுதி ஐஎன்டியூசி துணைத்தலைவர் சி. எல். ராபர்ட் தலைமையில் நடைபெற்ற வாகன பிரச்சார பயணத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Next Story