தாராபுரம் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
X
தாராபுரம் அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சங்கீதா வரவேற்றார். முகாமில் தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாண்டிமகாராஜா பேசும்போது 'இன்று, உயர் பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் படித்தவர்களே. ஆகவே மாணவர்கள் நன்றாக படித்தாலே உயர் பதவிகளில் அமரலாம்' என்றார். இதில், வக்கீல் வாரணவாசை மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story