ராமநாதபுரம் இடிதாக்கி மாணவிகள் பலி

ராமநாதபுரம் இடிதாக்கி மாணவிகள்  பலி
X
சத்திரக்குடி அருகே ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 மாணவிகள் இடி தாக்கி உயிரிழப்பு
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானில் மேகங்கள் திரண்டு கடுமையான இடி இடித்தது. மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது இதில் இடி தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்த அரியகுடி புத்தூர் பகுதி சேர்ந்த அஸ்பியா பானு, சபிக்கா பானு ஆகிய இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்துள்ளனர். சத்திரக் குடி அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவரும் சகோதரிகள் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு வெளியில் வேப்பமுத்து பொறுக்குவதற்காக தாயாருடன் சென்றுள்ளனர் அப்பொழுது திடீரென இடி தாக்கியதில் சகோதரிகள் இருவரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் அவர்கள் இருவரது உடலும் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது உயிரிழந்த சகோதரிகளின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இரு மாணவிகளின் உடல்களை இராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது இது குறித்து பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் விசாரித்து வருகிறார் இடிதாக்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story