அரசு பஸ் தானாக நகர்ந்து சென்றதால் பரபரப்பு.

X
Paramathi Velur King 24x7 |23 Aug 2025 8:06 PM ISTபரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் தானாக நகர்ந்து சென்றதால் பரபரப்பு.
பரமத்திவேலூர், ஆக.23: பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் திருச்செங்கோடு செல்வதற்காக அரசு பஸ் ஒன்றை அதன் டிரைவர் நிறுத்திவிட்டு அருகே உள்ள டீக்கடைக்கு அவர் கண்டக்டருடன் சென்றிருந்தார். அப்போது பஸ்சுக்குள் பயணிகள் யாரும் இல்லை.இந்நிலையில் பஸ் நிலையத்துக்குள் நிறுத்தப்பட்டு இருந்த அந்த அரசு பஸ் திடீரென டிரைவர் இல்லாமல் தானாக முன்னோக்கி நகர்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் சத்தம் போட்டனர். அப்போது அங்கிருந்த தனியார் பஸ் டிரைவர் ஒருவர் அந்த பஸ்சின் படிக்கட்டு வழியாக ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து உடனடியாக பஸ்சை ஹேன்ட் பிரேக்' போட்டு நிறுத்தியுள்ளார். பஸ்தானாகசென்று கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக பஸ்சின் முன்பு பயணிகள் மற்றும் எந்த வாகனமும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
