டிஎன்பிஎல் ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு.
டிஎன்பிஎல் ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா கீழ ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது 56. இவர் அருகில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். வியாழன் மாலை 3:45 மணியளவில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் மகன் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




