ஒரே நாளில் ஒன்பது குழந்தைகளை கடித்த வெறி நாய்கள் பதற வைக்கும் சிசிடிவி காட்சி,

நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் . வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மூன்று கன்று குட்டிகளை கடித்துக் குதறியதால் ஆடு கன்று குட்டிகள் இறந்து போனது, இதனை ஆட்டோவில் எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது அவர்களிடம் காண்பித்து,
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பேரூராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒன்பது குழந்தைகளை கடித்த வெறி நாய்கள் பதற வைக்கும் சிசிடிவி காட்சி, கண்டுகொள்ளாமல் இருக்கும் பேரூராட்சி நிர்வாகம். பெரம்பலூர் மாவட்டத்தில் வெறி நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் . வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மூன்று கன்று குட்டிகளை கடித்துக் குதறியதால் ஆடு கன்று குட்டிகள் இறந்து போனது, இதனை ஆட்டோவில் எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது அவர்களிடம் காண்பித்து,நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள், இந்த நிலையில் நேற்று மாலை . லப்பைகுடி காடு பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளை கடித்துள்ளது. இதில் தெருவில் விளையாடும் நடந்து சென்ற 9 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வெறி நாய்கள் கடித்துள்ளது. கடைவீதி, அரங்கூர் பிரிவு பாதை, ஜமாலியா நகர், உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் துரத்தி குழந்தைகளை கடிப்பதால் பெற்றோர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் வெளியே செல்ல அச்சம் தெரிவித்து வருகின்றனர். வெறி நாய்கள் கடித்த குழந்தைகளை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. ஆட்டை, கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதரை கடித்து வரும் வெறி நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை யெனில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். லப்பை குடிக்காடு பகுதியில் குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தி கடிக்கும் CCTV காட்சி உள்ளது.
Next Story