வருவாய்த் துறையினர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்,
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது ..... பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் அரங்கத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பாரதி வளவன் நல்லுசாமி ராஜகேசவன் / பாலச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜபருல்லா கலந்து கொண்டு பேருரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளர்களாக பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் இந்த மாநாட்டில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும், பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடிகளை ஏற்படுத்துவது, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும், வருவாய் துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களின் வரிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் பணி நிரந்தரத்திற்கு உச்சவரம்பு 5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் நாளை (பசலி ஆண்டின் தொடக்கமாக) வருவாய்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் மேலும் பொது மக்களுக்கு அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் தன்னலம் கருதாப் பணியை அங்கீகாரம் செய்யும் வகையில் மாநில அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து மாநாட்டில் கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை மாவட்ட மாநாட்டில் பெரம்பலூர் மாவட்ட மையத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கொண்டனர்.
Next Story