நாகராஜா கோயிலில் குமரி,கேரளா பக்தர்கள் வழிபாடு

நாகர்கோவில்
நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் வழிபாடு உகந்ததாக கருதப்படுகிறது. கேரள வழிபாடு அடிப்படையில் இந்த கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. கேரளாவில் ஆவணி மாத பிறப்பு சிறப்பாக கருதப்படும். அதன்படி நாகராஜா கோயிலும் ஆவணி மாத ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மற்ற ஞாயிற்றுக்கிழமைகளை விட ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்துவார்கள். அதன்படி இன்று  ஆவணி மாதம் இரண்டாவது  ஞாயிற்றுக்கிழமை என்பதால்   நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டதுடன்  நீண்ட வரிசையில் நின்று  தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நாகராஜா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகர்  சிலைகளுக்கு மஞ்சள்  தூவியும்,பால், ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகராஜரை வழிபட்ட பக்தர்கள் சிவன், அனந்த கிருஷ்ணர், பாலமுருகன், துர்க்கை அம்மன், தர்மசாஸ்தா சன்னதியில் வழிபாடு நடத்தினர். குமரி மாவட்டம்  மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.
Next Story