கோவை சிறுமி உலக சாதனை !

சிறுமி 255 கற்றல் அட்டைகளை மிகக் குறைந்த நேரத்தில் அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் – விஷ்ணுபிரியா தம்பதியரின் மகள் விகாஷினி (வயது 1.5) மிகச்சிறிய வயதில் உலக சாதனை படைத்துள்ளார். விகாஷினி குறைந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாடுகளின் கொடிகள், கோள்கள், வாகனங்கள், காய்கறிகள், பழங்கள், விலங்குகள், பறவைகள், உடல் உறுப்புகள் உள்ளிட்ட 255 கற்றல் அட்டைகளை துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளார். அவரது திறமையை பாராட்டி “வேர்ல்ட்ஸ் ரெக்கார்ட்ஸ் யூனியன்” சான்றிதழும் பதக்கமும் வழங்கி கௌரவித்துள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பதிவாளர் ஏலீஸ் ரெனாட்டு விருதுகளை வழங்கினார். “குழந்தைகளின் தனித்திறமையை பெற்றோர் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்; விகாஷினிக்கு கின்னஸ் சாதனையிலும் உதவுவோம்” என்று தாய் விஷ்ணுபிரியா தெரிவித்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சிறுமியின் சாதனையை பாராட்டினர்.
Next Story