வரதட்சணை வழக்கு. காவலருக்கு நிபந்தனை ஜாமின்.

வரதட்சணை வழக்கு. காவலருக்கு நிபந்தனை ஜாமின்.
X
மதுரை அருகே வரதட்சனை வழக்கு தொடர்புடைய போலீஸ்காரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த பூபாலன் (35) என்பவர் அப்பன் திருப்பதி போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக இவரது மனைவி தங்கபிரியா புகார் அளித்தார். பூபாலன் ஜூலை 19ல் கைது செய்யப்பட்டார். மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பூபாலன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்த பின்னர் தனது உத்தரவில் மனுதாரர் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமின் அனுமதிக்கப் படுகிறது. அப்பன்திருப்பதி போலீசில் 30 நாட்கள் ஆஜராக வேண்டும் என்றார். இவரது போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் தாயார் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story