சூலூர் அருகே கார் மோதலில் கல்லூரி மாணவி, தம்பி படுகாயம் !

சூலூர் அருகே கார் மோதலில் கல்லூரி மாணவி, தம்பி படுகாயம் !
X
செஞ்சேரிமலை அருகே பேருந்தை முந்திய இருசக்கர வாகனத்துக்கு கார் மோதல் – மாணவி, தம்பி காயம்.
சூலூர் அருகே செஞ்சேரிமலை பகுதியில் கல்லூரி மாணவி இலக்கியா மற்றும் அவரது தம்பி சரண் இருசக்கர வாகனத்தில் கல்லூரி பேருந்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவி மற்றும் அவரது தம்பி அருகிலிருந்தவர்கள் உதவியுடன் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. பின்னர் அது மாணவியின் உறவினருடையது என்றும், காரை ஓட்டியவர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. சம்பவத்தைக் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story