இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து
X
வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி, ஒருவர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்தவிபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வத்தலகுண்டு சேர்ந்த சேக்அப்துல்லா மகன் முகமதுரியாஜ்(24) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த முகமதுநவ்பில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி மேற்படி சம்பவம் குறித்து வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story