தேன்கனிக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை.

தேன்கனிக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை.
X
தேன்கனிக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எல்லையூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கூலித்தொழிலாளி. இவரது மகள் அஸ்மா (19) இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சோமகாதபுரத்தை சேர்ந்த சபீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது கணவருடன் அஸ்மா தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அஸ்மா வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற போது பெற்றோர் மகளை காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அஸ்மா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் இது குறித்து குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story