மத்துார் அருகே வீட்டின் கான்கிரீட் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு.

X
மத்துார் அடுத்துள்ள வாலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகு, மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி முனீஸ்வரி என்ற மனைவி, மனுஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இவரது வீட்டின் அருகில் வேடியப்பன், என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். மாதம் 26-ஆம் தேதி ரகுவின் தம்பி கேசவன் (24) குழந்தை மனுஸ்ரீயுடன் புதிதாக கட்டப் படும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் கான்கிரீட் உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மனுஸ்ரீ நேற்று உயிரிழந்தார். பரிதாபமாக இதுகுறித்து மத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

