கிருஷ்ணகிரி: டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் இரும்பு மூடி.

X
கிருஷ்ணகிரி பழையப்பேட்டை முருகன் கோயில் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை எண் 2932-ல் சின்னார் பகுதியை சேர்ந்த இராமமூர்த்தி என்பவர் மது கடையில் பீர் வாங்கியுள்ளார். அந்த பாட்டிலின் உள்ளே இரும்பு மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் எங்களுக்கு வந்த பீர் பாட்டிலை அப்படியே விற்கிறோம்" என்று பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

