கரூர்- சீமானை முதலமைச்சராக வேண்டும்.கட்சியினருக்கு நிர்வாகி வேண்டுகோள்.
கரூர்- சீமானை முதலமைச்சராக வேண்டும்.கட்சியினருக்கு நிர்வாகி வேண்டுகோள். நாம் தமிழர் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் நன்மாறன் வீர தமிழன் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் மேலும் மண்டல கரூர் மண்டல செயலாளர் ராஜேஷ் கண்ணா,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்ட கையூட்டு ஒழிப்பு பிரிவு பொறுப்பாளர் தாமோதரன்,எந்த கட்சியிலும் ஒருங்கிணைப்பு இல்லாததால் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றனர். கரூரில் நாம் தமிழர் கட்சியில் பணியாற்றக்கூடிய இளைஞர்கள்,கையூட்டு பெறாத நிர்வாகிகள் இருப்பதால் கரூரில் சீமான் கட்சி பிரகாசமாக உள்ளது.எனவே சீமானை முதலமைச்சராக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Next Story





