சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சங்கரநாராயணசாமி, சங்கரலிங்க சுவாமி ஆகிய திருக்கோவில்களில் விளக்கேற்றி வழிபட்டு கோமதி பெண் யானை-யிடம் ஆசி பெற்று மனநிறைவுடன் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

