வேப்பனப்பள்ளி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.

வேப்பனப்பள்ளி அருகே மண் கடத்திய  லாரி பறிமுதல்.
X
வேப்பனப்பள்ளி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வருவாய் ஆய்வாளர் தர்மன் மற்றும் வருவாய்த்துறையினர். கதிரிப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில் அதில் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 யூனிட் மண்ணை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story