பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்; வழக்கு பதிவு

X
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிர கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி பமலா (54). தற்போது உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவியாக உள்ளார். அதே பகுதியில் வழித்தட பிரச்சனை குறித்து அந்த பகுதியில் விசாரிக்க நேற்று சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் ஜெபராஜ் (37) என்பவர் பேரூராட்சி தலைவியை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பமலா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

