வேலை வாய்ப்பு முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

வேலை வாய்ப்பு முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
X
தூத்தூர்
குமரி மாவட்டம் தூத்தூர் புனித யூதா கல்லூரி, மத்திய கல்வி துறை, மத்திய அரசின் தொழில் பயிற்றுனர் பயிற்சி வாரியம் ஆகியவை  இணைந்து நடத்திய தொழில் பழகுனர் பயிற்சி மற்றும் நிரந்தர பணிக்கான நேர்காணல் தேர்வு முகாம் தூத்தூர் யூதா கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்ட ஓய்வு நீதிபதி பிரபுதாஸ் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம் எல் ஏ முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட ஐம்பதும் மேற்பட்ட நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டன.
Next Story