மீனவர்கள் வேலை நிறுத்தம் : ஆர்ப்பாட்டம்

X
குமரி ஆழ்கடல் பகுதியில் மத்திய அரசால் கொண்டுவரப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று சனிக்கிழமை குளச்சல் அருகே குறும்பனை கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சர்ச்சில் உட்பட ஏராளமானோர் விளக்க உரையாற்றினார்கள். திரளான பெண்கள் உட்பட மீனவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

