ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி
நெல்லையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று ஞாயிற்றுகிழமை காலை பால் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து பூதப்பாண்டி செல்லும் சாலையில் உப்பாத்துஓடை மேல் கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. ஒரு கட்டத்தில் லாரி பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் 50 அடி ஆழமான ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓடைக்குள் விழுந்ததால் அதிலிருந்து பால் முழுவதும் ஓடையில் ஓடி வீணானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து லாரியில் சிக்கி இருந்த டிரைவர் உடலை மீட்டனர். போலீசார் உடலை பிரதேச பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த டிரைவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என தெரிய வந்துள்ளது.
Next Story



