உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

X
Komarapalayam King 24x7 |24 Aug 2025 6:45 PM ISTகுமாரபாளையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.
குமாரபாளையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார். பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பகுதி வாரியாக நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி குள்ள நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா, ரேஷன் அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட உத்திரவுகளை வழங்கினார். நேற்று விண்ணப்பித்த பயனாளிகளில் ஒரே நாளில் மூன்று நபர்களுக்கு பட்டாவும், ரேஷன் அட்டை பெயர் மாற்றிய வகையில் 8 நபர்களுக்கும், மற்றும் பல துறை உத்திரவுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 565 மகளிர் உதவி தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு தனி வட்டாச்சியர் மாதேஸ்வரி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
