குடிக்க பணம் கேட்டு தாயை சித்ரவதை செய்த மகன் தலைமறைவு

Komarapalayam King 24x7 |24 Aug 2025 6:53 PM ISTகுமாரபாளையத்தில் குடிக்க பணம் கேட்டு தாயை சித்ரவதை செய்த மகன் தலைமறைவானார்.
குமாரபாளையம் அருகே வட்டமலை பகுதியில் வசிப்பவர் சுரேந்தர், 35. விசைத்தறி கூலி. இவருக்கு குடிப்பழக்க உள்ளதால், தன் அம்மா அங்கம்மாள், 85, என்பவரை தினமும் மிரட்டி, அடித்து துன்புறுத்தி பணம் வாங்கி குடித்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 03:00 மணியளவில், சுரேந்தர், தன தாயிடம் குடிக்க பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தி, தலை முடியை பிடித்து, தர தர வென இழுத்து வந்ததில், அங்கம்மாள் பலத்த காயமடைந்தார். இதனை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வர, சுரேந்தர் தப்பியோடி விட்டார். அங்கம்மாள் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அங்கம்மாளின் மகள் சுலோச்சனா, 63, குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மகன் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
