கல்லகொரை பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம்
கல்லகொரை பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் – 200க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர் கல்லகொரை: பொதுமக்களின் நலனுக்காக, கல்லகொரை பகுதியில் இன்று நடைபெற்ற மாபெரும் இலவச அந்த பகுதி.பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முகாமை திமுக மாவட்ட செயலாளர் கே. எம். ராஜி தொடங்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், மருத்துவர் அணி பவேஸ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது . முகாமில் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை, சோதனை, கண்பரிசோதனை,ஈஜிசி, உள்ளிட்ட சேவைகள் நடைபெற்றன. இரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை, குழந்தை நலம் மற்றும் பெண்கள் நலனை மையமாக வைத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ சேவைகளைப் பயன் பெற்றனர். துவக்க விழாவில் பேசுகையில், கே. எம். ராஜி, “கிராமப்புற மக்களின் ஆரோக்கியம் நம் முதன்மை. இது போன்ற முகாம்கள் மூலம் மக்கள் நேரடியாக மருத்துவ சேவையை பெறுவார்கள்” என்று தெரிவித்தார். முகாமில் மருத்துவர்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பரிசோதித்து, அவசர சிகிச்சை தேவையானவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சி சமூகப் பொறுப்புடன் நடைபெற்று, பொதுமக்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story




