மதுரையில் உயிரிழந்த கோத்தகிரி இளைஞர் குடும்பத்துக்கு ஆறுதல், உதவிகள் வழங்கி துணை நின்ற செய்தியாளர் குழு

X
மதுரையில் உயிரிழந்த கோத்தகிரி இளைஞர் குடும்பத்துக்கு ஆறுதல், உதவிகள் வழங்கி துணை நின்ற செய்தியாளர் குழு மதுரையில் கடந்த வாரம் நடந்த துயர சம்பவம் கோத்தகிரி பகுதிக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அங்கு நடிகர் விஜய் கட்சி மாநாடுக்கு சென்றிருந்த இளம் திறமையான ரோஷன் ( வயது சுமார் 19) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். ஊர் முழுவதும் பரவிய இச்செய்தி, நண்பர்கள், உறவினர்கள், மற்றும் சமூக அமைப்பினரின் மனதில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில்மாநிலதுணை தலைவரும் மூத்த செய்தியாளருமான தமிழ்வெங்கடேசன் தலைமையில் மாநில துணை செயலாளர் ஜாம்பவான் ஜெரால்ட் ,மாவட்ட தூலவர் லாரண்ஸ்,மாநில துணை ஒருங்கிணப்பாளர் உலிகல்சண்முகம்,பொருளாளர் நவாஸ்.கோத்தகிரி செய்தியாளர் செந்தில் உள்ளிட்ட குழு கோத்தகிரியில் உள்ள ரோஷன் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்தனர். தாயார், தந்தை மற்றும் உறவினர்கள் கண்கலங்கிய நிலையில் இருந்ததை பார்த்த செய்தியாளர்கள், குடும்பத்தின் துயரை பகிர்ந்து கொண்டு ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தனர். சாதாரண ஆறுதலை மட்டுமல்லாமல், அன்றாட தேவைக்கான மளிகைப் பொருட்கள், முக்கிய தேவைகளுக்கான நிதி உதவி ஆகியவற்றையும் வழங்கினர். “இது ஒரு குடும்பத்தின் மட்டுமல்ல, முழு சமூகத்தின் துயரமாகவே பார்க்கிறோம். நீங்கள் தனியாக இல்லை; செய்தியாளர் சமூகம் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும்” என தமிழ்வெங்கடேசன் குழு உறுதியளிதது அங்கு கூடியிருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் தலைவர்கள் செய்தியாளர்களின் இந்த மனிதநேய அணுகுமுறையை பாராட்டினர். “ஒரு குடும்பத்தின் துயரில் பங்கேற்று, உதவியுடன் துணையாக நிற்கும் செய்தியாளர்கள் சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணம்” என்றனர். இந்த சந்திப்பு வெறும் செய்தி சேகரிப்பைத் தாண்டி, சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாக அவர்கள் கூறினர் ரோஷனின் குடும்பத்துக்கு தொடர்ந்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், கல்விபோன்ற தேவைகளில் செய்தியாளர் குழு தேவையான ஆதரவுகளை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தனர்.
Next Story

