திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் மாணவ மாணவிகளின் அசத்தல்

X
கிரசன்ட் பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டிகள் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் மாணவ மாணவிகளின் அசத்தல் தேசிய சாதனையாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் நீலகிரி மாவட்டம் கிரசன்ட் பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டிகள் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் இன்று கோலகலமாக தொடங்கியது இது மாணவ மாணவிகளின் தனித்திறமைகள் வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தருந்தது தேசிய சாதனையாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தனர் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற கிரசன்ட் பள்ளியின் மாணவர் விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக தொடங்கின மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், தடகளம், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், துப்பாக்கிச் சுடுதல், குழு விளையாட்டுகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றனர். சிறப்பு விருந்தினர்கள்: இந்நிகழ்ச்சியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வென்ற சாதனையாளர் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். தலைமை விருந்தினராக (பாரா-ஒலிம்பியன்)தேசிய தங்கப் பதக்க வீரர் மற்றும் தேசிய சாதனையாளர் திலீப் கவித் ,4வது தென் ஆசிய தடகள சாம்பியன் சர்வதேச தடகள வீரர் ஷ்ரவாணி சங்கிள் ஆகியோர் கலந்து கொண்டனர் கௌரவ விருந்தினராக இந்திய பயிற்சியாளர் திரு. வைஜ்நாத் காலே கலந்து கொண்டார் வர்கள்் மாணவர்களிடம் உரையாற்றி, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். விழாவின் சிறப்பம்சங்கள்: போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story

