கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
X
வனத்துறையினர் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த மக்னா காட்டு யானை அப்பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை. வனத் துறையினா் விரட்டியும் அந்தப் பகுதியை விட்டுச் செல்ல மறுத்து அதே பகுதியில் நடமாடியது. பின்னா் அதிகாலையில் தானாக அங்கிருந்து சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். இதேபோல ஓவேலி சுண்ணாம்புப் பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் விவசாயத் தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டிருந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். குடியிருப்புகள், விவசாயத் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்" பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று தனியாக உலா வருவதுடன், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், குடியிருப்புகளை உடைத்து அரிசி உட்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த யானை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர், மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் தேயிலை தொழிற் சாலை மற்றும் எஸ்டேட் அலுவலர்கள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரேஷன் கடையின் கதவுகளை உடைத்து ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரையை ருசித்து சென்றது. இந்நிலையில் இரவு, 11:00 மணிக்கு, ரேஷன் கடைக்கு வந்த யானை கதவை உடைத்து அரிசி மூட்டையை வெளியே எடுத்து சாலையில் போட்டு சேதப்படுத்தி ருசித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவால வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக் குழுவினர், அப்பகுதிக்கு வந்து, யானையை துரத்தி உள்ளனர். அதனை கண்டுகொள்ளாத யானை, வெளியே எடுத்த அரிசி முழுவதையும் உட்கொண்ட பின்னரே, அங்கிருந்து சென்றது. இப்பகுதியை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
Next Story