காரில் வந்தவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் அதிவேகமாக காரில் வந்தவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.,அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூக அக்கறைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில வந்து கொண்டிருந்த போது பள்ளியின் அருகே உள்ள சாலையில் ஒரு காரில் இருவர் வந்துள்ளனர். கார் அதிவேகமாக வந்ததாகவும் சாலையில் மாணவர்கள் நடந்து சென்ற போது கார் மாணவர்களை இடிப்பது போல் வந்ததாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் மாணவர் ஒருவர் காரில் வந்தவர்களை ஆபாசமாக பேசியதாகவும் காரில் இருந்த ஒருவர் அந்த மாணவரை கன்னத்தில் அறைந்ததாகவும் இந்நிலையில் அந்த மாணவர் அவருடன் சேர்ந்து படிக்கும் சகமாணவர்களிடம் தெரிவித்த நிலையில் மாணவர்கள் ஒன்று கூடி காரில் வந்தவரை தகாத வார்த்தைகளில் பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அருகே இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு சமாதானமாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் காரில் வந்தவரை சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பதிவு வரும் நிலையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அக்கறை,ஒழுங்கு முறைகளை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஸ்டாலின் அரசு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடம் எழுந்துள்ளது.
Next Story

