எங்களைப் பொறுத்தவரை மருத்துவர் அய்யாவும் சின்ன ஐயாவும் வேறு இல்லை பாமக அதிவிரைவில் ஒன்று கூடிகளம் காணும் என்று உத்திரவாதத்தை தருகிறோம்பாமக பொருளாளர் பேட்டி

X
எங்களைப் பொறுத்தவரை மருத்துவர் அய்யாவும் சின்ன ஐயாவும் வேறு இல்லை பாமக அதிவிரைவில் ஒன்று கூடிகளம் காணும் என்று உத்திரவாதத்தை தருகிறோம் என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பேட்டி... விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை அலுவலகத்தை மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ஆவியூர் பாண்டி சாமி,மாரனேரி ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் ரங்கசாமி, மாவட்ட அமைப்பு தலைவர் வைரமுத்து, அமைப்பு செயலாளர் கருப்பசாமி, தேர்தல் பணி குழு தலைவர் சத்தீஸ்வரன் ,முன்னிலையில் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா திறந்து வைத்து நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா விருதுநகர் மாவட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகுதியான காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு மருத்துவமனை கொண்டு வர வேண்டும், வத்திராயிருப்பில் உள்ள அரசு மருத்துவமனையை சீரமைத்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குதர வேண்டும் என்றும்பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம், சிவகாசி மாநகராட்சியில் மக்கள் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மாநாடு குறித்த கேள்விக்கு மக்கள் பணியை எவ்வாறு செய்வார்கள் என்பதை பார்த்துவிட்டு தங்களது கருத்தை சொல்வதாகவும் மேலும் இந்த மாநாட்டை அரசியல் எழுச்சி மாநாடாக விஜய் மாற்றவில்லை என்று வருத்தமாக உள்ளது என்றார்.மேலும் எங்களைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஒன்று தான் சட்டரீதியாக இந்த அமைப்பை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சரியாக செய்து கொண்டிருக்கிறார் எங்களைப் பொறுத்தவரை மருத்துவர் அய்யாவும் சின்ன ஐயாவும் வேறு இல்லை பாமக அதிவிரைவில் ஒன்று கூடிகளம் காணும் என்று உத்திரவாதத்தை தருகிறோம் மேலும் மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் அவர்களின் நடை பயணம் மருத்துவர் அய்யாவின் மனதை மாற்றும் என்று நம்புவதாகவும் கூறினார் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு எங்களைப் பொறுத்தவரை திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு எதிரணியில் உள்ள அனைவரும் ஒன்று திரள வேண்டும் . ஒன்று திரண்டால் திமுகவால் ஜெயிக்க முடியாது ஆகையால் அதை உடைப்பதற்கான வேலையை இதுவரை திமுக செய்து கொண்டிருக்கிறது அதையும் மீறி திமுகவை வீழ்த்த எதிரிணியில் உள்ள அனைவரும் ஒன்று திரள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது திமுகவில் குடும்ப அரசியல் தாண்டி முதல்வர் ஸ்டாலினோ ,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோ தங்களை தகுதிப்படுத்திக்கிட்டு தாங்கள் சரியாகத்தான் இந்த ஆட்சியை செயல்படுத்துகிறோம் என்று நிரூபித்தால் நாங்களும் கைதட்டிவர வேற்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார் பேட்டி: கவிஞர் திலகபாமா - மாநில பொருளாளர்
Next Story

