திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத

X
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, இராஜபாளையம் வட்டம், சம்பந்தபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்(மதுரை கோட்டம்) மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.3.91 கோடி மதிப்பில் 416 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு, குடியிருந்து வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருக்கும் பயனாளிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இராஜபாளையத்தில் வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப்பணிகளையும், வெவ்வேறு வகையான பருத்திகள் நடவு செய்யப்பட்டு அதன் வளர்ச்சி குறித்து கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், திருவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் வனத்துறையின் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு, சாம்பல் நிற அணில்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் கல்வி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
Next Story

