வேங்கராயன் குடிக்காட்டில் வில்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பால்குடம் விழா

வேங்கராயன் குடிக்காட்டில் வில்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பால்குடம் விழா
X
விழா
தஞ்சாவூர் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பால்குடம்,  சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது. வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், பைரவர், மலையாளத்தம்மன், அங்காளம்மன் ஆகிய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 2019- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து  தாரை தப்பட்டையுடன், வாணவேடிக்கையோடு, பக்தர்கள் பால் குடம், செடல் காவடி, பால்காவடி, அலகுகாவடி எடுத்து வந்து, வில்லாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரமும்,  தீபாரதனையும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story