சங்கரன்கோவில் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் திறப்பு

சங்கரன்கோவில் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் திறப்பு
X
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாயமலை கிராமத்தில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் "புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்" மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் "புதிய மருத்துவ கட்டிடம்" உட்பட பல்வேறு கட்டிடங்களை மாண்புமிகு அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுபிரமணியன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story