கடையநல்லூரில் மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குற்றாலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற காரானது அரசு பேருந்தின் முன்பகுதியில் உரசியது இதில் அரசு பேருந்தை மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது பேருந்தானது அருகில் உள்ள புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் அரசு பேருந்தில் இருந்த 20- -க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களின் உதவுடன் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அருசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

