போச்சம்பள்ளி அருகே டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி.

X
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கோட்டை மருதூர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சிலம்பரசன் (22). இவர் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு டூவீலரில் புறப்பட்டார். அப்போது மத்தூர் அடுத்த கவுண்டனூர் சந்திப்பு சாலை அருகில் வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த சிலம்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மத்துர் போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

