தஞ்சாவூரில் ஊர்க்காவல் படையினருக்காக நடைபெற்ற போட்டி நிறைவு விழாவில் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு*

X
அரியலூர், ஆக.25- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு ஊர் காவல் படை சோழா விளையாட்டு போட்டிகளில் நிறைவு நாளான (24/08/2025) இன்று தமிழ்நாடு ஊர் காவல் படை ADGP (பொறுப்பு) உயர்திரு டாக்டர் R.தினகரன் IPS அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு R.ராஜாராம் TPS அவர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து சரக ஊர் காவல் படையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தொழில்திறன் மற்றும் விளையாட்டு பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை திருச்சி மற்றும் தஞ்சை சரகத்திற்கு ADGP DR R.தினகரன் IPS அவர்கள் வழங்கினார். உடன் ஊர் காவல் படையின் திருச்சி சரக உதவி தளபதியும், KRD TVS நிறுவனத்தின் உரிமையாளர் லயன் இராஜன்.
Next Story

