திருப்பத்தூர் அருகே முன் விரோத காரணமாக விவசாயிக்கு கொலை முயற்ச்சி! சரமாரி அடி உதை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே முன் விரோத காரணமாக விவசாயிக்கு கொலை முயற்ச்சி! சரமாரி அடி உதை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரஜினி வயது (43) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் கோவிந்தராஜ் இவர்களுக்கு நீண்ட நாட்களாக நில பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததுள்ளது இந்நிலையில் நீதிமன்றத்தில் ரஜினிக்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது இதன் அடிப்படையில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது ரஜினிக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர் அதற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது சாமிநாதன் மகன் கோவிந்தராஜ் ரஜினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் தகராறு முற்றி போகவே ரஜினியை சரமாரியாக தாக்கி கையை கடித்து கொலை முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மற்றும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 9 ஆயிரம் ரூபாய் மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றுள்ளார் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரஜினியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து கந்திலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

