ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் தாயார் உள்ளிட்ட ஆறு பேர் கைது

X
அரியலூர், ஆக.25- ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் தாயார் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.* அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தை அரும்புராஜ், சசிகலா தம்பதிகளின் மகன் அரவிந்த் என்கிற அறிவழகன். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் தனது தாயார் சசிகலாவுடன் அவரது மகன் அரவிந்த் என்கிற அறிவழகன் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த அரவிந்த் என்கிற அறிவழகன் தனது தாயாருடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா இது குறித்து உறவினரான சத்தியராஜ், ராமநாதன், சிவா மற்றும் தனது அக்கா கண்ணகி அவரது மகன் கோகுல்ராஜ் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த சத்தியராஜ், ராமநாதன், கோகுல்ராஜ், கண்ணகி,சிவா ஆகியோர் சசிகலாவின் வீட்டிற்கு வந்து அரவிந்த் என்கிற அறிவழகனை கண்டித்துள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட தகராறில் 6 பேரும் சேர்ந்து அறிவழகனை தாக்கியதில் படுகாயம் அடைந்த அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அறிவழகனை கொலை செய்ததாக அவரது தாயார் சசிகலா, சத்யராஜ், ராமநாதன், கோகுல்ராஜ், கண்ணகி, சிவா ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

