வாலாஜாபேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்து விபத்து

X
பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி நாகலாந்து பதிவெண் கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, 30 பயணிகளுடன் அதிகாலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 30 பேர் காயம் அடைந்தனர்.
Next Story

