ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தி ஆண்டிமடத்தில் நடைபெற்ற  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஐந்தாவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தி ஆண்டிமடத்தில் நடைபெற்ற  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஐந்தாவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
X
ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தி ஆண்டிமடத்தில் நடைபெற்ற  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஐந்தாவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூர், ஆக.25- ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தி ஆண்டிமடத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஐந்தாவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அரியலூர் மாவட்ட  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-வது மாவட்ட மாநாடு ஆண்டிமடத்தில் மாவட்ட தலைவர் பி.பத்மாலதி தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட மாநாட்டை மாநில தலைவர்களில் ஒருவருமான எம்.ஜெயசீலன் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இர.மணிவேல், மாவட்ட செயலாளர் சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரைசாமி,  மாவட்ட துணை செயலாளர் கே.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம் மற்றும்  விசிக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பாலசிங்கம், விசிக மாநில செயலாளர் கண் கொளஞ்சி விசிக ஒன்றிய செயலாளர் எம்.தேவேந்திரன், சிபிஎம் ஆண்டிமடம் வட்ட செயலாளர்கள் மு.வேல்முருகன், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், தா.பழூர் ஒன்றிய செயலாளர். ஜெ.ராதாகிருஷ்ணன், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சாமிதுரை. மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ஆர்.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மீண்டும் மாவட்ட தலைவராக பி.பத்மாவதியும், மாவட்ட செயலாளராக என்.அருணாசலமும், பொருளாளராக கே.கிருஷ்ணனும்,. துணை தலைவராக டி.தியாகராஜனும், துணை செயலாளர் சிவசங்கரியும் என புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக மாநில செயலாளர் இ.சங்கர் நிறைவுரயாற்றி பேசினார். மாநாட்டில் ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றிட வேண்டும். மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் தலைமுறை தலைமுறையாக வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்க முற்படும் மாவட்ட நிர்வாகத்தை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பால் மாடு மூலம் சிறு வறுமானத்தை பாதுகாக்க வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story