புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா

X
குமரி மாவட்டம் கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் சார்பில் பங்குத்தந்தை ரவி காட்ஸன் கென்னடி தலைமையில் உணவுத் திருவிழா நடந்தது. இதில் 18 அன்பிய மக்கள் இணைந்து பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்தனர். இதில் கிழங்கு, கடலை, இறைச்சி, ஐஸ்கிரீம், பாப்கார்ன், இனிப்பு சோளம், கரும்பு ஜூஸ், சுடச்சுட ஆப்பம், முட்டைக்கறி, பிரியாணி, தயாரித்து பகிர்ந்தளிக்கப்பட்டது. பல்வேறு செடி, மரம் மற்றும் பழ மரங்கள் வழங்கப்பட்டது. விழாவில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பங்குத்தந்தை பரிசுகள் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பங்குத்தந்தை, பங்கு அருட்பணிப்பேரவை நிர்வாகிகள் மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
Next Story

