"அயர்ன் மேன்" பட்டம் பெற்ற குமரி மருத்துவர்

X
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் பிளம்மிங்ஸ்சன் லாசரஸ் (44). பல் மருத்துவர் ஆவார். இவர் வெளிநாடுகளில் நடந்த அயர்ன் மேன் போட்டிகளில் ஆறு முறை பங்கேற்று வெற்றி பெற்று அயர்ன் மேன் பட்டத்தை வென்றுள்ளார். இவர் மலேசியா, பின்லாந்து, எகிப்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் என 6 கண்டங்களில் நடந்த போட்டிகளில் 2019 முதல் பங்கேற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். மிகவும் கடினமான இந்த போட்டியில் பல் டாக்டர் பிளம்மிங்ஸ் சன் லாசரஸ் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவர் பிளம்மிங்சன் லாசரஸ், 2019ம் ஆண்டு மலேசியாவில் 140.6 பிரிவிலும், 2022 பின்லாந்தில் 70.3, பிரிவிலும் 2022 மற்றும் 2023 ஆண்டில் எகிப்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளில் 70.3 பிரிவிலும்,2024-ம் ஆண்டு பிரேசிலில் 70.3 பிரிவிலும் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பிளெமிங்சன் லாசரஸ் கடந்த வெள்ளிக்கிழமை (22-8-2025 ) அன்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, 6 கண்டங்களில் நடந்த அயர்ன் மேன் நிகழ்வுகள் குறித்தும் மருத்துவரான தான் அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதை குறித்தும் விளக்கி கூறினார். அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட துணை முதல்வர் மென்மேலும் பல அறிய சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
Next Story

