ஜெயங்கொண்டம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம்  அருகே தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு
X
ஜெயங்கொண்டம் அருகேதமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது இளைஞர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர், ஆக.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் ஜெயசூர்யா (வயது 22) இவர் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார் இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தனது சொந்த ஊரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் மாநாடு முடிந்தவுடன் தனது இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான தெற்கு புதுக்குடி கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லகம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஜெயசூர்யா பலத்த காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தனது வாரிசாக இருந்த ஒரே ஒரு மகனையும் பறிகொடுத்த மகாராஜனின் குடும்பம் மட்டுமின்றி கிராமமே மிகுந்த துக்கத்தில் உள்ளது.
Next Story